டீசல் விலை உயர்வால் 2,000 அரசு பேருந்துகளின் சேவையை நிறுத்தி இருப்பதாக அதிர்ச்சி தகவல்

சென்னை : டீசல் விலை உயர்வால் நாள் ஒன்றுக்கு 9 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வரும் அரசு போக்குவரத்து கழகம், தமிழகம் முழுவதும் 2000 வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் சேவையை நிறுத்தி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டீசல் மானியம் ரத்து, போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு போன்றவற்றால் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடி இழப்பை சந்தித்து வந்த அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, டீசல் விலை உயர்வு கூடுதலாக ரூ.1 கோடி இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் பேருந்து கட்டணம் உயர்ந்த நிலையில் டீசல் விலை உயர்வு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளது. இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட சத்தமே இல்லாமல் போக்குவரத்து கழகங்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் 2000 வழித்தடங்களில் அரசுப் போக்குவரத்து சேவையானது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 4000 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையானது படிப்படியாக குறைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவது உள்ள 8 போக்குவரத்து கழகங்கள் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் டீசல் பயன்படுத்தி வந்த நிலையில், அதனை 17 லட்சம் லிட்டராக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து கட்டண உயர்வால் சுமார் 30 லட்சம் மக்கள் அரசுப் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்த்திருப்பதால், வாருவாயானது 10% மட்டுமே உயர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

× RELATED மதச் சடங்குகளில் தலையிடுவதில்...