×

அஜபா நடனத்துடன் ஆழித்தேரில் எழுந்தருளிய தியாகராஜர் : திருவாரூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவாரூர்: திருவாரூரில் உலகப் புகழ்பெற்ற தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து அஜபா நடனத்துடன் புறப்பட்ட தியாகராஜர், அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஆழித்தேரில் எழுந்தருளினார். விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளும் புறப்பட்டு தேரில் எழுந்தருளினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆரூரா தியாகேசா என மெய்சிலிர்க்க கோஷங்களை எழுப்பினர்.

சோழ மண்டலத்தில் அமைந்துள்ள தொன்மையான தலங்களில் தியாகராஜர் கோவில் முதன்மையானதாகும். சர்வதோஷ பரிகாரதலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. இங்குள்ள ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற சிறப்புக்குரியதாகும். இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் அஜபா நடனத்துடன் தியாகராஜர் ஆழித்தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று ஆரவாரத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு