×

தமிழகத்தில் பரவலாக மழை: கன்னியாகுமரியில் வீடுகள், கட்டடங்களை மழை நீர் சூழ்ந்தது

கன்னியாகுமரி: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. மேலும் பல இடங்களில் ஆலங்கட்டியுடன் கன மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்ததால் அருகில் இருந்த மின் கம்பங்கள் முறிந்தன. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

தேனி மாவட்டம் பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனிடையே வெப்பச்சலத்தின் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்யும் என்பதும் மையத்தின் எச்சரிக்கையாகும்.  

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகள் மற்றும் சுந்தரநார் பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இடி, மின்னலுடன் நேற்று பெய்த கனமழையால் பண்ணிவாய்க்காலில் வந்த வெள்ளம், தண்ணீரில் கலக்காமல் ஊருக்குள் புகுந்தது. இதனால் ராஜாக்காமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 65 வீடுகள் மழை நீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன.

இதனால் வீடுகள் இடிந்து விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ராஜாக்காமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 15 தென்னைநார் தொழிற்சாலைகளில் சூழ்ந்துள்ள மழை நீரால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கதம்பைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்கள் மற்றும் பண்ணையில் உள்ள படகுகள் மழை நீரால் சேதமடையும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் பொய்முகத்தை திறந்து தண்ணீரை கடலில் கலக்க ஏற்பாடு செய்தால் மட்டுமே தண்ணீர் வடியும் என்று கிராம மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித்...