×

சூப்பர் கிங்சிடம் தோற்று வெளியேறியது கிங்ஸ் லெவன்

புனே: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீசியது. பஞ்சாப் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், கிறிஸ் கேல் களமிறங்கினர். என்ஜிடி வேகத்தில் அதிரடி வீரர் கேல் டக் அவுட்டானார். ஆரோன் பிஞ்ச் 4, ராகுல் 7 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர். மனோஜ் திவாரி - டேவிட் மில்லர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 60 ரன் சேர்த்தது. திவாரி 35 ரன் (30 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), மில்லர் 24 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அக்சர் பட்டேல் 14 ரன் எடுக்க, அடுத்து வந்த கேப்டன் அஷ்வின், ஆண்ட்ரூ டை இருவரும் என்ஜிடி பந்துவீச்சில் டக் அவுட்டாகினர்.

அதிரடியாக 25 பந்தில் அரை சதம் அடித்த கருண் நாயர் 54 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பிராவோ வேகத்தில் சாஹர் வசம் பிடிபட்டார். கிங்ஸ் லெவன் 19.4 ஓவரில் 153 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சில் என்ஜிடி 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 10 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தாகூர், பிராவோ தலா 2, சாஹர், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து வென்றது. ரெய்னா அதிகபட்சமாக 61 ரன் (48 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். சாஹர் 39  ரன், ஹர்பஜன் 19 ரன், டோனி 16 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். என்ஜிடி  ஆட்ட நாயகன் விருது பெற்றார். பஞ்சாப் அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...