×

நடப்பு சாம்பியன் இந்தியா பைனலில் அதிர்ச்சி தோல்வி

டாங்கே: தென் கொரியாவில் நடைபெற்ற 5வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் பைனலில், நடப்பு சாம்பியனான இந்திய அணி போராடி தோற்று 2வது இடம் பிடித்தது. மொத்தம் 5 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா - தென் கொரியா நேற்று மோதின. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக விளையாடிய தென் கொரிய வீராங்கனைகள், இந்திய கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் அந்த அணியின் யங்சில் லீ அபாரமாக கோல் அடித்து 1-0 என முன்னிலை ஏற்படுத்தினர்.

பதில் கோல் அடிக்க இந்திய வீராங்கனைகள் கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற தென் கொரிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தியா வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. தென் கொரியா 3வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது. முன்னதாக அந்த அணி 2010, 2011ல் பட்டம் வென்றிருந்தது.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சென்னையில் ஐ.பி.எல். போட்டி; ஏப்.25ல் டிக்கெட் விற்பனை..!!