×

ரியல் மாட்ரிட் 3வது இடம்

ஸ்பெயினியில் நடந்து வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில், ரியல் மாட்ரிட் அணி தனது 38வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் வில்லாரியல் அணியுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் பேல் 11வது நிமிடத்திலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 32வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ரியல் மாட்ரிட் 2-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது பாதி ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கடும் நெருக்கடி கொடுத்த வில்லா ரியல் அணிக்கு மார்டினஸ் (70வது நிமிடம்), காஸ்டிலெஜோ அஸுவகா (85வது நிமிடம்_ கோல் அடித்து சமன் செய்ய உதவினர். ரியல் மாட்ரிட் அணி 76 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்தது. தலா 37 போட்டிகளில் விளையாடி உள்ள பார்சிலோனா (90 புள்ளி), அத்லெடிகோ மாட்ரிட் (78 புள்ளி) அணிகள் முறையே முதல் 2 இடங்களை உறுதி செய்துள்ளன. கோல் அடித்த மகிழ்ச்சியில் ரியல் மாட்ரிட் வீரர் ரொனால்டோ.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்