×

விமான போக்குவரத்தில் புதிய சாதனை ஒரே நாளில் பறந்த 60 ஆயிரம் பேர்: விமான சேவைகளும் அதிகரிப்பு

மீனம்பாக்கம்: கொரோனா தொற்று, ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டுகளால் கடந்த 2 ஆண்டாக அனைத்து பண்டிகைகள், விழாக்கள், விடுமுறை கொண்டாட்டங்கள் எதுவுமே நடைபெறவில்லை. 2022 மே மாதத்திற்குமேல் கொரோனா வைரஸ் அனைத்து அலைகளும் படிப்படியாக குறைந்து சகஜநிலைக்கு திரும்பியது. இதையடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. சொந்த ஊரில் விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், பண்டிகையையும் கொண்டாட மக்கள் கூட்டம் கூட்டமாக பயணிக்கின்றனர். இதனால் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.கடந்த நவம்பர் மாதம் சென்னை விமான நிலையத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 15,85,199. நவம்பர் மாதம் விமானங்களின் எண்ணிக்கை 10,889. டிசம்பரில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து சென்னை விமான நிலையத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 17,22,496. சென்னை விமான நிலைய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு, கடந்த டிசம்பர் 23ம் தேதி, சென்னை உள்நாட்டு விமான நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில், பயணிகள் வருகை புறப்பாடு, ஒரேநாளில் 60,375. இது சென்னை விமான நிலைய வரலாற்றில் ஒரு புதிய சாதனையாக உள்ளது. கொரோனா காலத்திற்கு முன்னதாக 2019ம் ஆண்டில் கூட டிசம்பர் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் தான். ஆனால் தற்போது அதையும் தாண்டி 60 ஆயிரம்பேர் பயணம் செய்துள்ளனர். இதையடுத்து வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்த ஆண்டில் இருந்து, சென்னைக்கு கூடுதல் விமானங்களை இயக்குகின்றன. அதன்படி ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம் தற்போது, சென்னை-பாரிஸ் இடையே வாரத்தில், 3 நாட்கள் விமானங்களை இயக்கி வருகிறது. வரும் மார்ச் மாதத்தில் இருந்து வாரத்தில் 5 நாட்களாக விமான சேவைகளாக அதிகரிக்கப்படுகிறது. அதேபோல், லூப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தற்போது, வாரத்தில் 3 நாட்கள், சென்னை-பிராங்க்பர்ட் இடையே, விமானங்களை இயக்குகிறது. அது இனிமேல் வாரத்தில் 5 நாட்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எத்தியாட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தற்போது, வாரத்துக்கு 7 விமான சேவைகளை இயக்குகிறது. இனிமேல் அது வாரத்தில் 14 விமான சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது. அதேபோல், ஏர் ஆஸ்திரியா  விமான நிறுவனம் செயின்ட் டென்னீசுக்கு, வாரத்தில் ஒரு நாள் மட்டும் விமான சேவைகளை இயக்குகிறது. இனிமேல் அது வாரத்தில் 2 நாட்கள் விமான சேவைகளை இயக்க முடிவு செய்து இருக்கிறது. இவைகள் தவிர மேலும் பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சென்னைக்கு விமான சேவைகளை புதிதாக இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. இதேபோல் வெளிநாட்டு விமான நிறுவனங்கள், சென்னைக்கு போட்டி போட்டுக்கொண்டு விமான சேவைகளை அதிகரிப்பதால், தமிழ்நாட்டு முக்கிய சுற்றுலாத்தலமாக மாற வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்….

The post விமான போக்குவரத்தில் புதிய சாதனை ஒரே நாளில் பறந்த 60 ஆயிரம் பேர்: விமான சேவைகளும் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Meenambakkam ,
× RELATED பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம்...