×

இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சிறப்பு ஊக்கத்தொகை: டி.ஜி.பி.சைலேந்திரபாபு

சென்னை: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சிறப்பு ஊக்கத்தொகை என டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சென்னை புதுப்பேட்டை காவலர் பல்பொருள் அங்காடியில் மின்தூக்கி வசதியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ஜி.பி சைலேந்திரபாபு; இந்த ஆண்டில் காவல் உதவி ஆய்வார்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறை விடுமுறை வழக்கவும், இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொவை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில், சம்பவம் நடந்த அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இரவு பணியில் ஈடுபடும் காவலருக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய டி.ஜி.பி.சைலேந்திரபாபு போதைப்பொருட்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வெளிநாட்டை சேர்ந்தவர்களை ஏற்கெனவே கைது செய்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார். …

The post இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சிறப்பு ஊக்கத்தொகை: டி.ஜி.பி.சைலேந்திரபாபு appeared first on Dinakaran.

Tags : T. GG GP ,Sylendra Babu ,Chennai ,GG GP ,Silendra Babu ,Chennai Pudupet Guard ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...