
சென்னை: பள்ளி, கல்லூரிகள் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக சென்னையில் ஒரே நாளில் வியாபாரிகள் உட்பட 62 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதை பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கும் வகையில் காவல்துறை பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சென்னை முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர். அதன்படி மாநகரம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்ததாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரவுடிகள் உட்பட 11 பேரை போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்ததாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வியாபாரிகள் உட்பட 51 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 147 சிகரெட்டுகள் மற்றும் ரூ.370 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கஞ்சா வழக்கில் தொடர்புடைய 331 குற்றவாளிகளை போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அவர்களில் 2 பேர் திருந்தி வாழ்வதாக நன்னடத்தை பிணை ஆணை பெற்று சென்றனர்….
The post பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா, குட்கா விற்பனை செய்ததாக ஒரே நாளில் வியாபாரிகள் உட்பட 62 பேர் கைது: கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.