- நேரடி நெல் கொள்முதல் நிலையம்
- ஜி. வாசன்
- சென்னை
- தமிழ் மாநில காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ஜி.கே.
- வாசன்
- டெல்டா
- தின மலர்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: டெல்டா மாவட்டப்பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு விளைநிலங்களில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிரை நம்பி இருக்கிறார்கள். நெல் சாகுபடிக்கு தேவைப்படும் உரத்தின் விலை, விவசாய கூலித்தொழிலாளர்களின் கூலி உள்ளிட்ட உற்பத்திக்கு ஆகும் செலவுகள் மிகவும் அதிகம். ஆனால் அறுவடை செய்த பிறகு நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். எனவே விவசாயிகள் குவிண்டால் நெல்லுக்கு ஆதார விலையாக குறைந்த பட்சம் ரூ. 3,000 கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். மேலும், நெற்பயிர் உட்பட சில பயிர்கள் போதிய தண்ணீர் கிடைக்காத சூழலில் கருகிவிட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். எனவே தமிழக அரசு, சம்பா நெற்பயிர் அறுவடை செய்யும் இக்காலத்தில் கடின உழைப்பை மேற்கொண்ட விவசாயிகளின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு, அவர்கள் எதிர்பார்க்கும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள், ஆதார விலை ரூ. 3,000, கருகிய பயிர்களுக்கான இழப்பீடு ஆகிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்….
The post நேரடி நெல்கொள்முதல் நிலையம்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.