×

பெண் மருத்துவர் பலாத்காரம் அரசு டாக்டருக்கு 10 ஆண்டு சிறை: மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கொரோனா காலத்தில் அரசு ஏற்பாட்டில் தனிமைப்படுத்துதலில் இருந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சக மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, சுழற்சி முறையில், பணியில் ஈடுபட ஏதுவாக ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.  சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த வெற்றிசெல்வன், தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார். அந்த மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர்களும் அதே விடுதியில் தங்கியிருந்தனர்.  விடுதியில் தங்கி இருந்தபோது, மருத்துவர் வெற்றிசெல்வன், பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக பெண் மருத்துவர்  ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் தேரணிராஜனிடம் அளித்த புகார் அடிப்படையில் விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது.விசாரணையில் பெண் மருத்துவர் பலாத்காரம்  உறுதி செய்யப்பட்டது உறுதியானது.இது தொடர்பாக தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபாருக், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி மருத்துவர் வெற்றி செல்வனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராதத் தொகையில் ரூ.20,000த்தை பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்….

The post பெண் மருத்துவர் பலாத்காரம் அரசு டாக்டருக்கு 10 ஆண்டு சிறை: மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : rapatgaram ,Women's Special Court ,Chennai ,Corona ,Dinakaran ,
× RELATED பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம்...