×

குட்கா ஊழல் விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் : உள்துறை செயலருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: குட்கா ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று சி.பி.ஐ. இயக்குனர், உள்துறை செயலர் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சிபிஐ இயக்குநர் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதி அனுப்பினார்.கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் தொடர்புடைய குட்கா ஊழல் வழக்கு விசாரணையை, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து சிபிஐ அமைப்புக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

 வழக்கின் முக்கியத்துவத்தை கருதியும், தமிழ்நாட்டின் முக்கியமான இந்த வழக்கு விசார ணை நேர்மையாகவும் நியாயமாகவும், விரைவாகவும் நடைபெறும் பொருட்டு நேர்மை யான, அனுபவமிக்க, வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழுவை உடனடியாக அமைத்து, தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் நேர்மையற்ற அதிகாரிகள் என  ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ள இரண்டையும் அப்புறப்படுத்தி, நீதியை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags :
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...