×

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வழக்கு: பள்ளிகல்வித்துறை செயலர், இயக்குநருக்கு நோட்டீஸ்

மதுரை: மதுரை மாவட்டம், அழகாபுரியை சேர்ந்த கருப்பையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தமிழக பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் 6,081 மேல்நிலைப்பள்ளிகள், 5,803 உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. உயர்நிலைப்பள்ளிகளில் 884,  மேல்நிலைப்பள்ளிகளில் 34 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் 4,092 ஆசிரியர் பணியிடங்கள் ஓராண்டிற்கும் மேலாக காலியாக உள்ளன. வரும் மே  மாத இறுதியில் சுமார் 425 தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர். 2018-19ம் கல்வி ஆண்டில் 1,500 தலைமை ஆசிரியர் பணியிடங்கள்  காலியாக வாய்ப்புள்ளன.

இதனால், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பாதிக்கக்கூடும். எனவே, மாணவர்களின் நலன் கருதி தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு  வழங்கி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், தேவையான ஆசிரியர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில்  கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர், மனு குறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர்,  பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags :
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...