×

கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின் வடகொரியா அதிபர் இன்று தென்கொரியா செல்கிறார்

சியோல்: வடகொரியா அதிபர் இன்று தென்கொரியா செல்கிறார்.வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நடந்த கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆனபின்னும் வடகொரியா அதிபர்கள் யாரும் தென்கொரியா செல்லவில்லை. இந்தநிலையில் 2011ல் வடகொரியா அதிபர் பதவியை ஏற்ற கிம் ஜோங் உன் அடுத்தடுத்து உலக நாடுகள் எச்சரிக்கையை மீறி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனையை நடத்தி அமெரிக்கா, ஜப்பான் உள்பட அனைத்து நாடுகளையும் பதற வைத்தார்.

இதுவரை 6 அணு ஆயுத சோதனை நடத்தி உள்ளார். மேலும் கடைசியாக நடத்திய ஏவுகணை சோதனை, வடகொரியாவில் இருந்து அமெரிக்காவின் எந்த ஒரு பகுதியையும் தாக்கக்கூடிய சக்தி பெற்றதாக இருந்தது.இதையடுத்து பேச்சுவார்த்தை மூலம் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னை சமரசப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் சியோலில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்  போட்டியில் வடகொரியா வீரர்கள் கலந்து கொண்டனர். கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங்கும் அரசு பிரதிநிதியாக தென் கொரியா சென்றார். அதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தை அடிப்படையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச வடகொரியா அதிபர் சம்மதித்தார். மே மாதம் இந்த சந்திப்பு நடக்க உள்ளது.

இதற்கு முன் தென் கொரியாவில் இன்று நடக்கும்  இருநாடுகள் இடையிலான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கிம் ஜோங் உன் முடிவு செய்துள்ளார். 65 ஆண்டுகளுக்கு பின் வடகொரியா அதிபர் ஒருவர் தென் கொரியா வருவதால் சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Tags :
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்