×

ஐக்கிய அரபு எமிரேட் பணி உரிமம் விவகாரம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பதவி நீக்கம்: இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இஸ்லாமாபாத்: ஐக்கிய அரபு எமிரேட் பணி உரிமம் வைத்திருந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹவாஜா ஆசீப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹவாஜா ஆசிப். பல ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்டில் பணிபுரிந்து வந்த ஹவாஜா ஆசிப் தந்தை இறந்ததால் 1991ல் பாகிஸ்தான் திரும்பி அரசியலில் ஈடுபட்டார்.

அவருக்கு இக்மா எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் பணி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை அவர் வேட்பு மனுவில் மறைத்ததாக கூறப்படுகிறது. எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்தவரும், ஹவாஜாவிடம் தேர்தலில் தோறறவருமான உஸ்மான் தார் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதிகள் அத்தார் மினாலாக், அமீர் பரூக், மோஷின் அக்தர் கயானி ஆகியோர் விசாரித்தனர். வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் பணி உரிமையை ஹவாஜா ஆசிப் வைத்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்கவில்லை. இதனால் கட்சி பதவியையோ அல்லது ஆட்சி பதவியையோ வகிக்க தகுதி அற்றவர். எனவே, அவர் ேதர்தலில் வெற்றி பெற்றது செல்லாது. இனி தேர்தலில் போட்டியிடவும் வாழ்நாள் தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது..இதனால் ஹவாஜா ஆசீப் தனது அமைச்சர் பதவியையும், எம்பி பதவியையும் இழந்துள்ளார்.

Tags :
× RELATED இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறல்: 11 ஆயிரம் பேர் வெளியேற்றம்