×

ஹாலோகிராம் ஸ்டிக்கர் பற்றாக்குறையால் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் பணி தாமதம்

பெங்களூரு :  கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி புதிய வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில் புதிய வாக்களர்களுக்கு இன்னும் அடையாள அட்டை கிடைக்கவில்லை. இது தொடர்பாக தேர்தல் அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் கூறுகையில், பெங்களூருவில் 28 தொகுதிகள் உள்ளன. இதில் 88 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிய வாக்காளர்கள் உள்ளனர்.

4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், எழுத்துப்பிழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வி்ண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு புதிய வாக்காளர் அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. பத்மநாபநகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தயாராகிவிட்டது. விரைவில் வழங்கப்படும். பல தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு அடையாள அட்டை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையில் ஒட்டப்படும் ஹாலோகிராம் ஸ்டிக்கர் பற்றாக்குறையால் தாமதம் ஏற்படுகின்றது. போதிய அளவு ஹாலோகிராம் ஸ்டிக்கர் தயாரானவுடன் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும்  பணி  தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்