தமிழக அரசு ஊழலற்ற அரசு என ஆளுநரின் நற்சான்று உள்நோக்கம் கொண்டது: இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு கூறியிருக்கும் நற்சான்று கருத்து கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அரசின், அனைத்து மட்டங்களிலும் ஊழல் புரையோடி உள்ளது. இது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.

தடை செய்யப்பட்ட குட்கா ஊழல், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணம் விநியோகம், ஊழல் முறை காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.மத்திய வருமானத் துறையினர் அமைச்சர்கள், அதிகாரிகள், வீடுகள், அலுவலகங் களிலும், தலைமை செயலகத்திலும் சோதனைகள் தொடர்ந்த  நிலையில் ஆளுநர், இபிஎஸ் அரசு ஊழலற்ற அரசு என நற்சான்று அளித்திருப்பது உள்நோக்கம் கொண்டது.

× RELATED அதிமுக அரசு மக்களின் பிரச்சனைகளை...