×

உத்தர பிரதேசத்தில் ரயில் விபத்து: 11 பள்ளி குழந்தைகள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல்

லக்னோ: உத்திர பிரதேச மாநிலம் குஷி நகரில் ரயில் விபத்தில் பள்ளி குழந்தைகள் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில் விபத்தில் 11 பள்ளி குழந்தைகள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது என்று மோடி தெரிவித்துள்ளார். விபத்தில் பள்ளிக்குழந்தைகள் 11 பேர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில்மோதியதில் 11 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் டிவைன் மிஷன் பள்ளியில் பயிலும் 18 மாணவர்களுடன் பள்ளிப்பேருந்து ஒன்று பள்ளிக்கு இன்று காலை 7 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஹ்பூர்வா பகுதி அருகே ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்கும்போது, எதிர்ப்பாராத விதமாக பேருந்து மீது ரயில் (எண் 55075 )மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளிப் பேருந்தில் பயணம் செய்த 11 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் நிதியுதவி

குஷிநகரில் ரயில் மோதி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் கோரக்பூர் ஆணையரை இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட யோகி ஆதித்யநாத் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் .மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்துள்ள அனைவருக்கும் உரிய மருத்துவ உதவிகளை வழங்குமாறு உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags :
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...