×

இடைநிலை ஆசிரியர்களை காவல்துறை மிரட்டுவதா?: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: இடைநிலை ஆசிரியர்களை காவல்துறை மூலம் மிரட்டுவதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்  கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 2009 ஆண்டு ஜூன் மாதம் 30ம்  தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட  இடைநிலை ஆசிரியர்களுக்கு அதற்கு முந்தைய மாதத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ரூ. 14 ஆயிரம் ஊதிய  முரண்பாடு உள்ளதை களைய வேண்டும் என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு, காவல்துறை மூலம் கலைந்து செல்லுமாறு மிரட்டல் விடுப்பதை  வன்மையாக கண்டிக்கிறது.உண்ணாவிரதம் இருந்த 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று  வருகின்றனர். இப்பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து இடைநிலை ஆசிரியர்களை உடனே அழைத்துப் பேசி சுமூகத் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.


Tags :
× RELATED சொல்லிட்டாங்க…