சொல்லிட்டாங்க...

அமைச்சர் ஜெயக்குமார்: நடிகர் கமலுக்கு மய்யத்தை ஆரம்பித்து அதை கட்டிக்காக்க தெரியவில்லை. கட்சியின் போக்கு  பிடிக்கவில்லை என ஒரு வழக்கறிஞர் வெளியேறிவிட்டார். அடுத்ததாக நடிகை பிரியா வெளியேற தயாராகிக்கொண்டு இருக்கிறார்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் நன்றாக உணர்ந்தவர். குறிப்பாக காவிரி நதிநீர் பிரச்னைகள் குறித்து தெளிவாக தெரிந்து வைத்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் சந்திக்க நேரம் ஒதுக்காவிட்டால் பிரதமர் தமிழகத்துக்கு எந்த இடத்தில் எப்போது வந்தாலும் அவருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதத்தில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம்.

அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கம்பீரமாக இருந்த காவல்துறை இன்று ஏவல்துறையாக மாறிவிட்டது.

× RELATED அதிமுகவுடன் அமமுக சேருவதற்கு வாய்ப்பே கிடையாது: டிடிவி தினகரன் பேட்டி