×

குற்றவாளி சாமியார் ஆசாராமுடன் பிரதமர் மோடி இருக்கும் வீடியோவால் சர்ச்சை

புதுடெல்லி: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசாரமுடன் மோடி இருக்கும் வீடியோவால் சர்ச்சை வெடித்துள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவிடம் நரேந்திரமோடி ஆசிபெறும் காட்சி வீடியோவில் உள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அவர் குற்றவாளி என அறிவித்தவுடன் இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவேற்றியது. அதில் ஆசாராம் உடன் பிரதமர் மோடி மேடையில் ஒன்றாக நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க. பழைய வீடியோவை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வீடியோ 2013-ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது ஆசாராம் பாபுவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அப்போது அவர் மீது எந்த வழக்குகள் ஏதும் இல்லை என்றும் பா.ஜ.க. விளக்கமளித்துள்ளது.

Tags :
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...