×

ஆறுகளைக் பாதுகாக்கும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவு

மும்பை : ஆறுகளை காக்கும் கொள்கையை உருவாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆறுகளை காக்கும் கொள்கையை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி வனசக்தி என்கிற அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்தது. அதில் ஆற்றுப் படுகைகளில் விடுதிகள், உணவகங்கள் கட்ட மாநில அரசு அனுமதித்தால் 49 ஆறுகள் கடுமையாக மாசுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டப்படி ஆறுகளை காப்பது மாநில அரசின் கடமை தெரிவித்தனர். தூய்மையான ஆறுகள், மாசுபடாத சுற்றுச்சூழல் ஆகியவற்றுடன் வாழ்வது குடிமக்களின் அடிப்படை உரிமை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆறுகளைக் காக்க விரிவான கொள்கையை உருவாக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க மகாராஷ்டிர மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். ஆறுகளை சுத்தம் செய்யாத காரணத்திற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம், மகாராஷ்டிர அரசுக்கு கடந்த ஆண்டு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்