×

நீரின்றி வறண்டது வீராணம் ஏரி: வளப்பதற்கு விடப்பட்ட மீன்குஞ்சுகள் செத்துவிட்டதால் மீனவர்கள் வேதனை

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி வறண்டுவிட்டதால் வளர்ப்பதற்காக விடப்பட்ட ஏராளமான மீன்குஞ்சுகள் செத்துக்கிடக்கின்றன. வீராணம் ஏரியில் மீன்பிடி தொழிலை அடிப்படையாக கொண்டு லால்பேட்டை, நத்தமலை, கொள்ளுமேடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 2000 மீனவ குடும்பங்கள் உள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்திற்காக மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் இரண்டரை லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

இவற்றை குறித்த காலத்தில் ஏரியில் விடாததே மீன்குஞ்சுகள் இறப்பதற்கு காரணம் என்பது மீனவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மீன்குஞ்சுகள் முழு வளர்ச்சி அடைவதற்கு 4 மாதங்கள் வரை ஆகும். ஆனால் 2 மாதங்கள் மட்டுமே ஏரியில் தண்ணீர் இருக்கும் நிலையில் மீன்குஞ்சுகள் விடப்பட்டதால் அனைத்தும் செத்துவிட்டதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் மெத்தனப்போக்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...