×

உலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு : காப்புரிமை கோர முடியாது நீதிமன்றம் தீர்ப்பு

இந்தோனேசியா: உலக புகழ் பெற்ற குரங்கு செல்பி புகைப்பட வழக்கு சமந்தப்பட்ட குரங்கு காப்புரிமை கோர முடியாது என சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தோனேசியாவின் ஜாவா காடுகளுக்கு புகைப்படம் எடுக்க சென்ற பிரிட்டனை சேர்ந்த டேவிட் ஸ்லேட்டர் என்ற புகைப்பட கலைஞர் தனது கேமராவை வனப்பகுதியில் தவறவிட்டார். இந்த கேமராவை கையில் எடுத்து குரங்கு ஒன்று செல்பி எடுத்து கொண்டது.

பின்னர் கேமராவை கண்டறிந்த டேவிட் குரங்கின் செல்பி புகைப்படத்தை பயன்படுத்த தொடங்கினர். ஆனால் இந்த புகைப்படத்தின் காப்புரிமை குரங்குக்கு தான் சொந்தம் என விலங்கு நல அமைப்பான பீட்டா  வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த பிரான்சிஸ்கோ நீதிமன்றம் விலங்குகல் மனிதர்களுக்கு எதிராக காப்புரிமை கோர முடியாது என்று உத்தரவிட்டது.   

Tags :
× RELATED இங்கிலாந்து நீர்வீழ்ச்சியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி