×

ஆய்வில் அதிர்ச்சி : ஆர்டிக் கடல் பனியில் அதிக அளவில் பிளாஸ்டிக் நுண்துகள்கள்

ஆர்டிக் கடல் பனியில் நடத்தப்பட்ட ஆய்வில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் அதிக அளவு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. கடலில் கொட்டப்படும் அதிக பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ஆர்டிக் கடல் பகுதியிருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் பனிக்கட்டியை ஆய்வு செய்ததில் 12 ஆயிரம் பிளாஸ்டிக் நுண்துகல்கள் இருந்தது தெரியவந்தது.

இதற்கு முன்பு இருந்த அளவை காட்டிலும் 3 மடங்கு இது அதிகம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்குள் கொட்டப்படுவது நீர்வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி மனித குலத்திற்கும் ஆபத்து என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags :
× RELATED எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க...