×

விராலிமலையில் ஜல்லிக்கட்டு : மாடுகள் முட்டி 6 பேர் காயம்

விராலிமலை: விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். விராலிமலையில் உள்ள மெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திருச்சி சாலை அருகே உள்ள வெள்ளியம்பூர்குளம்  மைதானத்தில்  நேற்று காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கியது. அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியை துவக்கி வைத்தார். திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை,திண்டுக்கல், மணப்பாறை, மதுரை, கரூர், விராலிமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து வரவழைக்கப்ட்ட 632 காளைகள் கால்நடைதுறை மருத்துவர்கள் சோதனைக்கு பின் வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டன.

232 மாடு பிடி வீரர்கள் பல சுற்றுகளாக மாடுகளை பிடித்தனர். ஜல்லிக்கட்டு மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இதில் மாடு முட்டியதில் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில்டிஆர்ஓ ராமசாமி, ஏடிஎஸ்பி இளங்கோவன், கோட்டாட்சியர் ஜெயபாரதி, டிஎஸ்பி கோபாலசந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.  பாதுகாப்பு பணியில் 100 க்கும் மேற்பட்ட போலிசார் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!