×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு : விநாடிக்கு 419 கனஅடியானது

மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 419 கனஅடியாக சரிவடைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் கடந்த சில மாதங்களாகவே மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக இருந்தது. இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், துணை நதியான பாலாறு பகுதியிலும் லேசான மழை பெய்ததால் கடந்த 20ம் தேதி முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், தற்போது மழை குறைந்துள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவும் சரிந்துள்ளது.

நேற்று முன்திதினம் விநாடிக்கு 627 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 419 கனஅடியாக சரிவடைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 35.41 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 35.37 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 9.83 டிஎம்சியாக உள்ளது. இதேபோல், ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 700 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 500 கனஅடியாக சரிந்தது.

Tags :
× RELATED அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...