பாம்பன் கடல் பகுதியில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பீடி இழை பண்டல்கள் கண்டுபிடிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குண்டுக்கால் கடல் பகுதியில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 40-க்கும் மேற்பட்ட பீடி இழை பண்டல்கள் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து பீடி இழை பண்டல்களை பறிமுதல் செய்தனர். முதல் தர புகையிலை கொண்ட இந்த பண்டல்களின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கைக்கு கடத்திச் செல்லும் போது ரோந்து படையினருக்கு அஞ்சி இவற்றை கடலில் வீசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி பண்டல்கள் கரை ஒதுங்கி இருக்கின்றனவா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. கடற்கரையில் சுமார் 2கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே பீடி பண்டல்கள் சிதறி கிடக்கின்றது. ஒரே நேரத்தில் ஏராளமான பண்டல்கள் சிக்கியிருப்பது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

× RELATED சேலம் மாவட்டம் கூலமேட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு