×

சித்ரா பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை வழியாக செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள்

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை வழியாக செல்லும் வாராந்திர ரயில்களை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வரும் 29ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தொடங்கி 30ம் தேதி காலை 6.54 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரமாகும். சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தரும் சித்ரா பவுர்ணமிக்கு, சிறப்பு ரயில்களை இயக்குவது தொடர்பான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வௌியிடவில்லை. எனவே, சித்ரா பவுர்ணமியான 29ம் தேதி மற்றும் 30ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில், திருவண்ணாமலை வழியாக கடந்து செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி, 29ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் திருவண்ணாமலை வழியாக இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களின் கால அட்டவணை விபரம்:
தாதர்  புதுச்சேரி எக்ஸ்பிரஸ்: 28ம் தேதி இரவு 21.50 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்பட்டு, 29ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு திருவண்ணாமலை வரும். பின்னர், காலை 7.15 மணிக்கு புதுச்சேரி சென்றடையும். 29ம் தேதி இரவு 8.50 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு, 10.40 மணிக்கு திருவண்ணாமலை வரும். பின்னர், 30ம் காலை 6.00 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்: ராமேஸ்வரத்திலிருந்து 28ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு மதுரை, மயிலாடுதுறை வழியாக 29ம் தேதி அதிகாலை 4.58 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். பின்னர், காலை 10 மணிக்கு திருப்பதி சென்று சேரும்.    

திருப்பதியில் இருந்து 29ம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு திருவண்ணாமலை வந்து சேரும். பின்னர், 30ம் காலை 7.35 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். பாமணி எக்ஸ்பிரஸ் ரயில்: மன்னார்குடியிலிருந்து 29ம் தேதி காலை 5.30 மணிக்கு மணிக்கு புறப்பட்டு, காலை 11.18 மணிக்கு திருவண்ணாமலை வரும். பின்னர், மாலை 4.35 மணிக்கு திருப்பதி சென்றடையும். புதுச்சேரி திருப்பதி எக்ஸ்பிரஸ்:  29ம் தேதி காலை 8.35 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு திருவண்ணாமலை வரும். பின்னர், மதியம் 13.20 மணிக்கு திருப்பதி சென்றடையும்.

Tags :
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...