×

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வைகோ மனுதாக்கல்

மதுரை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனுதாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 71 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து 17 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட உத்தரவிடக்கோரி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை காரணமாக குழந்தைகள் மற்றும் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக மனுவில் கூறியுள்ளார்.

மத்திய, மாநில அரசிடம் அனுமதி பெறாமல் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். ஸ்டெர்லைட்டின் புதிய தொழிற்சாலை விரிவாக்க பணிக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையின் பணிகளை நிறுத்தவும் அதனை நிரந்தரமூக மூட உத்தரவிடக்கோரியும் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார். இம்மனு மீதான விசாரணை விரைவில் நடைறெவுள்ளது.

Tags :
× RELATED மணல் முறைகேடு வழக்கில் 5 மாவட்ட...