அரசுப்படை தொடர் தாக்குதல்...தெற்கு கவுட்டா நகர் முழுவதும் கரும்புகை : கிளார்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்குகள் அழிப்பு

கவுட்டா: சிரிய உள்நாட்டு போரில் டமாஸ்கஸ் நகரில் பெரும் பகுதிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததையடுத்து அதிபர் ஆசாத்திற்கு ஆதரவான அரசு படை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கிழக்கு கவுட்டா நகரில் கிளர்ச்சியாளர்களை முற்றிலும் வெளியேற்றிய அரசுப்படையினர் தற்போது தெற்கு கவுட்டா நகர் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஐ.எஸ். அமைப்பு மற்றும் பயங்கரவாத அமைப்பினர் அரசுப்படையின் தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், அவர்களின் ஆயுதக்கிடங்குகள் அழிக்கப்பட்டு வருவதாக சிரிய அரசு தெரிவித்துள்ளது. தாக்குதல் நடைபெற்று வரும் தெற்கு கவுட்டா நகர் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனிடையே டமாஸ்கஸ் நகரில் இருந்து வெளியேற முயற்சிக்கும் பொதுமக்களை அரசுப்படைகள் ரஷ்யா மற்றும் ஈரான் உதவியோடி சிறைப்பிடித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம்சாட்டியுள்ளது.