×

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் 11 வீரர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில்60பேர் உயிரிழந்தனர்.  மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் 18 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக தலிபான் தீவிரவாதிகள் நேற்று பல்வேறு இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவத்தினர் மற்றும் போலீசார் என 11 பேர் உயிரிழந்ததாக மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் முகம்மது நாசர் நஸரி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...