×

அரசியலில் இருந்து கமல் காணாமல் போவார் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அரசியலில் இருந்து காணாமல் போவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் மத்திய அரசுக்கு முழு நெருக்கடி கொடுத்து வருகிறோம். அதிமுகவும், பாஜவும் கூட்டணி என்பது போன்று பத்திரிகையில் தன்னிச்சையாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு எதிராக யாருடனும் அதிமுக கூட்டணி வைக்கப்போவதில்லை.

நடிகர் கமல்ஹாசன் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் திடீரென்று டிவிட்டரில் வருவார். திடீரென்று யூ டியூப்பில் வருவார். திடீரென்று பேஸ்புக்கில் வருவார். அடுத்து அவர் எஸ்.எம்.எஸ்சில் வருவார். அதுக்கு அப்புறம் காணாமலேயே போய் விடுவார். அதுக்கு அப்புறம் ஆளே இருக்க மாட்டார். அது தான் நடக்கும். கட்டெறும்பு சிற்றெறும்பாகி, சிற்றெறும்பு காணாமல் போன கதையாகி விடும். அதே போல தான் கமல்ஹாசன் கதையும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…