×

அமெரிக்காவில் விசாரணைக்கு வந்த பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய பெண் நீதிபதி பணி நீக்கம்

ஃபுளோரிடா: அமெரிக்காவில் விசாரணைக்கு ஆளான பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர் மரணமடைவதற்கு காரணமான பெண் நீதிபதியை ஒய்வு பெறும் வரை இனி பணிக்கு வர வேண்டாம் என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஃபுளோரிடாவில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்காக கடந்த வாரத்தில் 59 வயதான சாண்ட்ரா ஃபாயி டுவிக்ஸ் நடக்க முடியாத சூழ்நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு ஆஜர் ஆனார். ஏற்கனவே ஆஸ்துமா நோயாளியான அவருக்கு விசாரணையின் போது மூச்சு இளைப்பு அதிகமானதால் மருத்துவ உதவி கோரினார்.

இதற்கு அனுமதி வழங்க மறுத்த பெண் நீதிபதி மேரீலி எர்லிச் மருத்துவ உதவி கோரும் நேரம் இதுவல்ல என்றும் முதலில் தனது கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வலியுறுத்தினார். மன உளைச்சலுக்கு ஆளான அவர் உடல்நலம் மேலும் மோசமான நிலையில் விசாரணைக்கு ஆளான 200 நாளில் உயிரிழந்தார். அந்த பெண் நீதிபதி மேரீலி எர்லிச் செயலை கண்டித்துள்ள  ஃபுளோரிடா உயர் நீதிமன்றம் வருகிற ஜூன் மாதம் 30ம் தேதி பணியிலிருந்து ஒய்வு பெறும் வரை பணிக்கு வர வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.

Tags :
× RELATED ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு