×

எச்4 விசா பெற்றுள்ள இந்தியர்கள் அமெரிக்காவில் சட்ட பூர்வ பணி வாய்ப்புகளை பெற முடியாத நிலை

அமெரிக்கா: எச்1 பி விசா பெற்றிருப்பவரின் கணவனோ மனைவியோ சட்டபூர்வமாக வேலைவாய்ப்பு பெற அனுமதிக்கும் முறையை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவில் எச் 1பி விசாவில் பணிபுரிவரின் கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எச்4 விசா வழங்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது 2015ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட சிறப்பு உத்தரவின் அடிப்படையில் எச்4 விசா வைத்திருக்கும் கணவனோ மனைவியோ ஓர்க்பெர்மிட் பெற்று சட்டப்பூர்வமாக பணிகளுக்கு செல்கின்றனர். ஆனால் இந்த முறையை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இந்த முடிவு நடைமுறை படுத்தப்பட்டால்  எச்4 விசா பெற்றுள்ளவர்கள் குறிப்பாக இந்தியாவை சேர்ந்த 70ஆயிரம் பேர் அமெரிக்காவில் சட்டப்பூர்வ பணி வாய்ப்புகளை பெற முடியாத நிலை ஏற்படும்.

Tags :
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...