×

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: பிரபல ஆங்கில தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று பிரபல ஆங்கில தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 224 தொகுதி கொண்ட கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 91 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 89 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று 3வது இடத்தை பெறும் என்றும் கூறியுள்ளது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத தொங்கு சட்டமன்றம் அமையவே வாய்ப்பு உள்ளது என்பதே கருத்துக்கணிப்பின் முடிவாகும், இதனால் கர்நாடக மாநிலத்தில் அடுத்து ஆட்சி யார் அமைக்கபோவது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மதசார்பற்ற ஜனதா தளம் உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கர்நாடக முதலமைச்சராக யார் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பிற்கு சித்தராமையாவுக்கு 46.15% பேரும், எடியூரப்பாவுக்கு 31.76% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனைபோல் லிங்காய சமூகத்திற்கு தனி மதம் அளித்து அங்கீகரித்த கர்நாடக அரசின் முடிவால் இதில் எந்த பாதிப்புகளும் இருக்காது என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை...