×

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சொந்த கிராமத்தில் ரூ.8.50 லட்சத்தில் குளங்களை தூர்வாரிய பட்டதாரி பெண்

அரியலூர்: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.8.50 லட்சத்தில் சொந்த கிராமத்தில் குளங்களை தூர்வாரிய பட்டதாரி பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமம். இக்கிராமத்தில் வசிப்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன். நல்லாசிரியர் விருது பெற்ற இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மூன்று மகளையும் நல்ல நிலையில் படிக்க வைத்த ஆசிரியர் தியாகராஜன் மூன்றாவது மகள் ஆனந்தவள்ளியை அமெரிக்காவில் திருமணம் முடித்து வைத்தார். வறட்சிக்கு இலக்கான மாவட்ட பட்டியலில் உள்ள அரியலூர் மாவட்டத்திற்கு தன்னால் இயன்றதை செய்யவேண்டும் என்று முடிவெடுத்த எம்சிஏ பட்டதாரி ஆனந்தவள்ளி கடந்த ஆண்டு விளாங்குடி கிராமத்தில் உள்ள 64 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரிய ஏரியை தேர்ந்தெடுத்து அமெரிக்காவில் உள்ள எய்ம்ஸ் இன்டியா பவுண்டேஷன் ப்ரம் அமெரிக்கா என்ற அமைப்பு கொடுத்த ரூபாய் 1 லட்சத்து என்பதாயிரத்து 500 மற்றும் தனது பங்களிப்பாக 4 லட்சம் சேர்த்து 5 லட்சத்து 80 ஆயிரத்து 500 தொகையினை தனது தந்தையிடம் ஏரியினை தூர் வார கேட்டுக்கொண்டார்.

அதன்படியே கடந்த ஆண்டு ஏரி தூர்வாரப்பட்டு கருவேலமுட்கள் காட்டாமனுக்கு செடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கிராமத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த மழைநீர் வெளியே வீணாகாமல் தூர்வாரிய குளத்தில் தேங்கியது இதனால் 44 பரப்பளவு உள்ள நன்செய் நிலத்திற்கு விவசாய பசானத்திற்கும் பொதுமக்கள் கால்நடைகள் என தற்போது வரை தண்ணீர் பயன்பாட்டிற்கு உதவுவது கோடைகாலத்து கொடையாக அமைந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக தற்போது விளாங்குடி கிராமத்தில் முற்புதர்கள் சூழ்ந்துள்ள மேலும் 2 குளங்களை தேர்வு செய்து நடப்பாண்டு அனுப்பிய 3லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவில் பணிபுரிந்தாலும் சொந்த மண்ணை மறக்காத அழகிய தமிழ் மகளுக்கு பொதுமக்களின் பாராட்டு குவிந்து வருகிறது.

Tags :
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!