×

எகிப்தில் 2ஆயிரம் ஆண்டு பழமையான ரோமன் சிலை கண்டுபிடிப்பு

எகிப்து: எகிப்தில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ரோமன் சக்கரவர்த்தி என்பவர் சிலையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அஸ்வான் நகரில் சிறிய குளம் ஒன்றினை தூர்வாரும் போது சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதும் தொல்பொருள் ஆய்வு துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தனர்.

அவர்கள் நடத்திய ஆய்வில் ரோமன் பேரரசர் மார்க்ஸ் அர்லியஸ் சிலை என்பது தெரியவந்தது. கி.பி 160 ஆண்டுகளில் ரோம சாம்ராஜியத்தை ஆட்சி செய்த மார்க்ஸின் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்து வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு