×

18 எம்எல்ஏ தீர்ப்பு வருவதால் பதவியை காப்பாற்ற பிரதமரிடம் கெஞ்சுவதற்காகத்தான் எடப்பாடி டெல்லி செல்கிறார்: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வருவதால் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக பிரதமரின் கையை, காலை பிடித்து கெஞ்சுவதற்காக தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதாக கருதுகிறேன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து விமானம் மூலம் இரவு 9.20 மணிக்கு சென்னை விமானநிலையம்  வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம்: கேள்வி : மனித சங்கிலிப் போராட்டத்தால் பயன் கிடைக்குமா?

ஊடகங்களுக்கு அதுபற்றி அதிகம் தெரிந்திருக்கும். ஆனாலும், எங்களுடைய போராட்டம் பற்றி அதிகளவு செய்தி வெளியிட மாட்டீர்கள். அதையெல்லாம் மீறி, தமிழகம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் பிரம்மாண்டமான முறையில், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஏழரை கோடி தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வு சங்கிலியாக, உரிமை சங்கிலியாக நடைபெற்றது. எனவே, இனியும் மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

வரும் 2ம் தேதி முதல்வர் டெல்லி செல்கிறாரே? அப்போது பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வாய்ப்பு உள்ளதா? 18 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே, அதிலிருந்து தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக பிரதமரின் கையை, காலை பிடித்து கெஞ்சுவதற்காக டெல்லி செல்கிறார் என்று கருதுகிறேன்.அடுத்த கட்ட போராட்டம் எப்போது அறிவிக்க போகிறீர்கள்?பதில்: விரைவில் எதிர் பார்க்கலாம் இவ்வாறு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறினார்.



Tags :
× RELATED ரூ.4 கோடி விவகாரம்: நயினார்...