×

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டின் முன்பு தற்கொலை போராட்டம்: அய்யாக்கண்னு பேட்டி

திருப்பூர்: நஞ்சு இல்லா உணவு, நதிகள் இணைப்பு மற்றும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழகத்தின் 32 மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டுள்ள தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர்  அய்யாக்கண்ணு, நேற்று திருப்பூருக்கு வந்தார்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அய்யாக்கண்ணு கூறியதாவது: ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்திற்கு வரும் 9ம் தேதிக்குள் நிதி  ஒதுக்கி நிறைவேற்ற  வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் பல கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்காவிட்டால் டெல்லியில் பிரதமர் மோடி வீட்டு முன்பு தொடர் போராட்டத்தை நடத்துவோம். முடியவில்லை என்றால் பிரதமர் வீட்டின் முன்  தற்கொலை செய்யும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.


Tags :
× RELATED கேட்டது ரூ.38,000 கோடி வந்தது ரூ.275கோடி:...