சிறப்பு அந்தஸ்து போராட்டம் என்ற பெயரில் ஏசி வசதியுடன் உண்ணாவிரத நாடகமாடிய சந்திரபாபு நாயுடு: நடிகை ரோஜா கடும் தாக்கு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ.வும், நடிகையுமான ேராஜா நேற்று காலை தரிசனம் செய்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில் சர்ச்சையை கிளம்பும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுப்பினர்களை நியமித்துள்ளார். இதில், பாஜ.வை சேர்ந்த மகாராஷ்டிர மாநில நிதியமைச்சர்  மனைவிக்கு பதவி வழங்கியுள்ளார். ஆனால், தமிழகத்திற்கு ஒரு பதவி கூட வழங்காமல் ஏமாற்றியுள்ளார்.

Advertising
Advertising

கடந்த 4 ஆண்டுகளாக பாஜ.வுடன் இணைந்து அமைச்சரவையை பகிர்ந்து கொண்டு, சிறப்பு அந்தஸ்து குறித்து வாய் திறக்காமல் சந்திரபாபு நாயுடு மவுனம் காத்திருந்தார். தற்போது, மத்திய அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து நாடகமாடி வருகிறார்.  மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, நான்கு பக்கமும் ஏ.சி. வைத்துக்கொண்டு 12 மணி நேரம் உண்ணாவிரத நாடகமாடினார். உண்மையிலேயே சந்திரபாபு நாயுடுவிற்கு சிறப்பு அந்தஸ்து பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தனது எம்.பி.க்களை ராஜினாமா செய்ய வைத்து டில்லியில் சென்று உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: