×

5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு

புதுடெல்லி:  பிரதமர் அலுலகத்திற்குள் உரிய அனுமதியின்றி நுைழய முயன்ற மாநில பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் மற்றும் அவரது குழுவினர் டெல்லி போலீசாரால் வலுகட்டாயமாக இழுத்து சென்று அப்புறப்படுத்தப்பட்டனர். டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 8 மாத குழந்தை பாலியல்  பலாத்காரத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தை அடுத்து டெல்லி பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கு மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக  மாநில பெண்கள் ஆணைய  தலைவர் மாலிவால், ‘ரேப் ெராகோ’ இயக்கத்தை தொடங்கினார். இதன் நோக்கம்,  பாலியல் பலாத்கார சம்பவ வழக்குகளை 6 மாதத்திற்குள் நடத்தி முடிக்க  வேண்டும்.

பாலியல் குற்றச்செயல்களில் தண்டிக்கப்படும் நபர்களுக்கு தூக்கு  தண்டனை விதிக்கும் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த  இயக்கம்தொடங்கினார். இந்த கோரிக்கையை ஆதரிப்போரிடமிருந்து இந்தியா  முழுவதிலும் இருந்து கடிதங்கள் பெறப்பட்டது. இதன் மூலம் சுமார் 5.55 லட்சம்  கடிதங்கள் பெறப்பட்டது. இவற்றை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்க சுவாதி  மாலிவால் மற்றும் அவரது ஆணைய உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் என சுமார்  50க்கும் மேற்பட்டோர் கார்களில் பேரணியாக சென்றனர். ஆனால், பிரதமர்  அலுவலகம் செல்ல உரிய முன்அனுமதி பெறவில்லை என கூறி மாலிவால் மற்றும் அவரது  குழுவினரை போலீசார் விஜய் சவுக்கில் தடுத்து நிறுத்தினர்.

அப்போது  போலீசாருக்கும் மாலிவால் மற்றும் அவரது குழுவினருக்கும் இடையே தள்ளு முள்ளு  ஏற்பட்டது.
இதுபற்றி துணை போலீசார் கமிஷனர் மதூர் வர்மா கூறுகையில், மாலிவால் உரிய அனுமதி பெறாததால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால், அவர்கள் கொண்டு வந்த கடிதங்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, அனைத்தும் அலுவலக வரவேற்பு அறையில் சேர்க்கப்பட்டது” என்றார்.

போலீசார் மீது குற்றச்சாட்டு
மாலிவால் கூறுகையில், “பல லட்சம் மக்கள் பெரும் நம்பிக்கையுடன் பிரதமருக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளனர். இதுதான் அவர்களுடைய மன்கிபாத். மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பதற்கு மாறாக தடுத்துவிட்டனர். எங்களை போலீசார் இழுத்து தள்ளிவிட்டனர். இது மிகவும் வருத்தமளிக்கக்கூடியது. போலீசார் வலுகட்டாயமாக எங்களை வெளியேற்ற முயன்றனர். இதனால் எனது கைகளில் காயம் ஏற்பட்டது. இத்தகைய செயல்கள் என்னையோ எனது குழுவினரையோ தடுத்துவிட முடியாது” என்றார்.

Tags :
× RELATED 21ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி பேரணி;...