×

பெண் இயக்குனரின் ஆலி ஆகஸ்ட் 14ல் ரிலீஸ்

 

சென்னை: ‘ஆலி’ படம் தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கிறது. தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணின் காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாகச் சொல்லும் படமாகும். இப்படத்தில் பிரஜின், டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன், கைலாஷ், கிருஷ்ண பிரசாத், லதா தாஸ், டாக்டர் ரஜித் குமார், சௌரவ் ஷ்யாம், ஆத்யா பிரசாத் (சுருதி), மன்ஹர் பிரியதர்ஷன், ஜோபி, மன்சாட் லீலா, சுரேஷ் திருவல்லா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பெண் டாக்டர் கிருஷ்ணா பிரியதர்ஷன். படத்திற்கான பாடல்களையும் எழுதி உள்ளார். மன்ஹர் சினிமாஸ் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவு – ரினாஸ் நாசர். தம்புரான், சுரேஷ் ரத்தீஷ் ராய், ஆர் ஆர் பிரதர்ஸ், ஷ்ரத்தா பார்வதி என ஒரு நட்புக் குழுவே இணைந்து இசையமைத்துள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.

Tags : Chennai ,Tamil Nadu-Kerala border ,Prajin ,Dr. ,Krishna Priyadarshan ,Kailash ,Krishna Prasad ,Latha Das ,Rajith Kumar ,Saurav Shyam ,Aadhya Prasad ,Sruthi ,Manhar Priyadarshan ,Joby ,Mansad Leela ,Suresh Thiruvalla ,
× RELATED இயக்குனர்கள் ஏமாற்றினார்கள்: யாஷிகா ஆனந்த் கசப்பான அனுபவம்