சென்னை: ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு இணைந்து நடிக்கும் படம், ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’. இதில் ரச்சிதா மகாலட்சுமி, யாஷிகா ஆனந்த், ஒய்.ஜி.எம்.மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா நடிக்கின்றனர். காவியா புரொடக்ஷன்ஸ், எஸ்2 மூவிஸ் சார்பில் பி.மஞ்சுநாத் தயாரிக்கிறார். கே.ஆர்.செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்ய, அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார். எஸ்.பி.அகமது எடிட்டிங் செய்ய, ரெம்பன் பால்ராஜ் அரங்கம் அமைக்கிறார். ஜாக்கி பிரபு சண்டை பயிற்சி அளிக்க, சேலம் சரவணன் நிர்வாக தயாரிப்பு செய்கிறார்.
படம் குறித்து கே.ஆர்.செந்தில்நாதன் கூறுகையில், ‘இப்படம் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிறது. இது அனைவருக்கும் பிடிக்கும்’ என்றார். அஸ்மிதா கூறும்போது, ‘இதில் நான், இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறேன்’ என்றார். யாஷிகாஆனந்த் கூறுகையில், ‘தமிழில் ‘டி.டி நெக்ஸ்ட் லெவல்’ என்ற படத்துக்கு பிறகு நல்ல கதைக்காக காத்திருந்தேன். இப்போது அது கிடைத்துள்ளது’ என்றார். ரச்சிதா மகாலட்சுமி கூறும்போது, ‘இன்றைய சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரிப்பது என்பது மிகவும் கடினமானது. ஒரு கதையை உருவாக்கும்போதே பல்வேறு சவால்கள் தொடங்கி விடுகின்றன. இது செந்தில்நாதன் சாரின் லட்சிய படைப்பு’ என்றார்.
