×

ஹனி ரோஸை ஓரங்கட்டிய ரக்‌ஷிதா ராம்

கடந்த 2023ல் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த ‘வால்டேர் வீரய்யா’ என்ற படம் வெளியானது. இதை பாபி கொல்லி இயக்கினார். தற்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். சிரஞ்சீவி நடிக்கும் 158வது படமான இது கேங்ஸ்டர் படமாக உருவாகிறது. ஆனால் தந்தை, மகள் பாசத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சிரஞ்சீவியின் மகளாக அனஸ்வரா ராஜன், மனைவியாக பிரியாமணி நடிக்கின்றனர்.

தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், முக்கிய கேரக்டரில் கன்னட நடிகையும், ரஜினிகாந்தின் ‘கூலி’ என்ற படத்தில் வில்லியாக நடித்தவருமான ரக்‌ஷிதா ராம் ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக இந்த கேரக்டரில் ஹனி ரோஸ் நடிப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், திடீரென்று அவருக்கு பதிலாக ரக்‌ஷிதா ராம் நடிக்கிறார்.

Tags : Rakshita Ram ,Honey Rose ,Chiranjeevi ,Bobby Kolli ,Anaswara Rajan ,Priyamani ,Pollachi ,Rajinikanth ,
× RELATED சந்தாதாரர்களால் கார் வாங்கிய கவர்ச்சி நடிகை