×

முன்னாள் மனைவியை இயக்கிய செல்வராகவன்

கடந்த 2004ல் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம், ‘7/ஜி ரெயின்போ காலனி’. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்தார். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக ‘7/ஜி ரெயின்போ காலனி’ படத்தின் 2வது பாகத்தை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இயக்கும் செல்வராகவன், இதிலும் ரவி கிருஷ்ணாவையே ஹீரோவாக்கி, அனஸ்வரா ராஜனை ஹீரோயினாக்கி இருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, முதல் பாகத்தில் அனிதா என்ற கேரக்டரில் நடித்த சோனியா அகர்வாலை, 2வது பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளார். காதல் திருமணம் செய்து, பிறகு கருத்து வேறுபாட்டால் விவாகரத்து மூலம் பிரிந்த செல்வராகவன், சோனியா அகர்வால் ஜோடி, திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Selvaraghavan ,Ravi Krishna ,Sonia Agarwal ,Yuvan Shankar Raja ,A.M. Ratnam ,Anaswara Rajan ,Anitha ,
× RELATED காக்டெயில் 2வில் நடிக்க பயந்தேன்: ராஷ்மிகா