×

ராசி கன்னா காதலிக்க விரும்பும் ஹீரோ

தமிழில் ‘ரவுடி அண்ட் கோ’ என்ற படத்தில் நடிக்கும் ராசி கன்னா, இந்தியில் 3 படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடித்த ‘உஸ்தாத் பகத்சிங்’ என்ற படம் தோல்வி அடைந்ததால், பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் ராசி கன்னா கூறுகையில், ‘இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை.

பாலிவுட் ரசிகர், ரசிகைகளை வசீகரிக்கும் நடிகராக கார்த்திக் ஆர்யன் இருக்கிறார். அவருடன் சேர்ந்து மென்மையான காதல் கதையில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. வலுவான உணர்ச்சி ஆழத்தை இருவருக்கும் இடையே வெளிப்படுத்தக்கூடிய கதையில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். அப்படிப்பட்ட காதல் கதை எங்கள் இருவருக்கும் பொருத்தமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Raashi Khanna ,Bollywood ,Pawan Kalyan ,Karthik Aryan ,
× RELATED காக்டெயில் 2வில் நடிக்க பயந்தேன்: ராஷ்மிகா