×

கருப்பு 2 எப்போது உருவாகிறது? சூர்யா பதில்

 

சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி எழுதி இயக்கி சூர்யா, திரிஷா நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிபெற்று, வசூலிலும் சாதனை படைத்து வரும் படம் ‘கருப்பு’. இப்படத்தின் வெற்றிவிழாவில் பங்கேற்ற சூர்யா பேசியதாவது: ‘கருப்பு’ படத்தில் நடிக்கலாம் என்று, 45 நிமிடங்களுக்குள் உறுதியான முடிவு எடுத்தேன். இந்த படம் முழுக்க, முழுக்க ஆர்ஜே பாலாஜியின் விஷன் மட்டுமே. ஒவ்வொரு படத்தையும் அதிக நம்பிக்கை வைத்து நடிக்கிறேன். ‘கருப்பு’ படத்தில் ஒப்பந்தமான நாளிலிருந்தே பாசிட்டிவ் விஷயங்கள் நடந்தது. அதற்கு காரணம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர்.

இந்த வெற்றி கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், நாங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. சமீபகாலத்தில் எனது படத்துக்கு இத்தகைய வரவேற்பு கிடைத்ததை நான் எதிர்பார்க்கவே இல்லை. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ‘கருப்பு’ 2ம் பாகம் உருவாகும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். விரைவில் அதுபற்றி தகவல் வெளியாகும் என்று நினைக்கிறேன்.

Tags : Surya ,Chennai ,RJ Balaji ,Trisha ,
× RELATED தயாரிப்பாளர் கோவை மணி திடீர் மரணம்