- சென்னை
- ரமணா கம்யூனிகேஷன்ஸ்
- ஏ.ஜே. பாலகிருஷ்ணன்
- விஐடி
- வேந்தர்
- தமிலியாக்கம்
- டாக்டர்
- ஜி. விஸ்வநாதன்
- டி. பி. ராஜேந்திரன்
சென்னை: திரைக்கு வந்த ‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ ஆகிய படங்களை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ஏ.ஜே.பால
கிருஷ்ணன் இயக்கத்தில் ‘திருக்குறள்’ என்ற படத்தை கடந்த ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இதையடுத்து 2ம் பாகம் தயாராகிறது. விஐடி வேந்தரும், தமிழியக்கம் தலைவருமான டாக்டர் ஜி.விசுவநாதன் வழங்க, ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கிறது. டி.பி.ராஜேந்திரன் இணைந்து தயாரிக்கிறார்.
இதுகுறித்து ஏ.ஜே.பால கிருஷ்ணன் கூறுகையில், ‘இரண்டாம் பாகத்தில் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த ஆளுமைகள், கலாசார மற்றும் வணிக தொடர்பு, தமிழர்களின் சங்ககால பண்பட்ட நாகரீகம் படமாக்கப்படுகிறது. சர்வதேச ரசிகர்களை கவரும் வகையில் ஹாலிவுட் கலைஞர்களின் பங்களிப்பும், ஏஐ தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி, அடுத்த ஆண்டு படம் திரைக்கு வருகிறது’ என்றார்.
