×

அவதூறு செய்திகளை வெளியிடுவதாக குற்றச்சாட்டு யூடியூப் சேனல் மீது தெலுங்கு நடிகை விஷ்ணுப்பிரியா போலீசில் புகார்

 

ஐதராபாத்: தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமான விஷ்ணுப்பிரியா, தன்னை பற்றி ஒரு யூடியூப் சேனல் தொடர்ந்து அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாக, தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மியாப்பூர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து மியாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜி.ரமேஷ் நாயுடு கூறியதாவது:

‘பிளே லைக் இன்காக்னிட்டோ’ என்ற யூடியூப் சேனல், விஷ்ணுப்பிரியாவை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியுள்ளது. அந்த வீடியோவில் திட்டமிட்டே ஆதாரமற்ற கருத்துகளும், மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களிடையே நடிகையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவருக்கு ஆன்லைன் மூலம் துன்புறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் யூடியூப் சேனல் செயல்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலர் சமூக வலைத்தளங்களில் நடிகையை தரக்குறைவாக விமர்சித்து வருவதால், அவருக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. வியூஸ்களுக்காகவும், பணத்துக்காகவும் ஒருவரது தனிப்பட்ட கண்ணியத்தை சீர்குலைப்பது பொறுப்பற்ற செயலாகும்.
புகாரின்பேரில் யூடியூப் சேனல் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67 மற்றும் 67(ஏ) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags : Vishnupriya ,YouTube ,Hyderabad ,Miyapur ,Hyderabad, Telangana ,G. Ramesh Naidu ,
× RELATED என்னை கண்டாலே பாண்டிராஜுக்கு பிடிக்காது: சொல்கிறார் மிஷ்கின்